லோகா சாப்டர் 1 படத்தின் ஓடிடி தேதி வெளியீடு
அசோக் (Author) Published Date : Oct 25, 2025 11:36 ISTபொழுதுபோக்கு
மலையாளத் திரையுலகில் மாபெரும் வெற்றியடைந்து, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற லோகா சாப்டர் 1 திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, வசூலில் பல சாதனைகளைப் படைத்த இப்படம், வரும் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில், நஸ்லென் கே. கஃபூர்
ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுடன், முன்னணி நடிகர்களான டோவினோ தாமஸ் மற்றும் இப்படத்தை தயாரித்த துல்கர் சல்மான் ஆகியோரும் கேமியோ ரோலில் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
குடும்பத்துடன் திரையரங்கில் பார்க்கத் தவறிய ரசிகர்கள், அக்டோபர் 31 முதல் லோகா சாப்டர் 1 திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டாரில் கண்டு மகிழலாம்.