LIK படத்தின் பட்டுமா பாடல் வெளியீடு


நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகிவரும் LIK படத்தின் சமீபத்திய அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில், இந்தப் படத்தின் முதல் வீடியோ பாடலான பட்டுமா வெளியானது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் பாடலின் பின்னணி இசை மிகவும் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்திற்காக அனிருத் இசை அமைத்திருந்த தீமா தீமா என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.
LIK திரைப்படம் வரும் டிசம்பர் 18 அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனினும், படத்தின் OTT உரிமைகளை வாங்குவது யார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
பிரதீப் ரங்கநாதன் இதற்கு முன் நடித்த படங்கள் மூலம் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். கடைசியாக அவர் நடித்த டியூட் திரைப்படம் அவருக்கு ஹாட்ரிக் 100 கோடி ஹிட் கொடுத்தது. அவர் நடித்துள்ள LIK திரைப்படமும் அவரது திரையுலகப் பயணத்தில் ஒரு பிளாக்பஸ்டர் படமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. படத்தின் வெற்றி, அது திரையரங்குகளில் வெளியாகும் போதே தெரியவரும்.