Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

கார்த்திக் சுப்புராஜ்ஜின் அடுத்த படத்தில் இணையவிருக்கும் மகாநதி நடிகை

கார்த்திக் சுப்புராஜ் - கீர்த்தி சுரேஷ்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பேட்ட. பேட்ட படத்திற்கு பின் காதநாயாகியை மையமாக கொண்டு இயக்கும் படத்திற்கு கீர்த்தி சுரேஷ் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்டோன் பெஞ்ச் புரொடக்சன்ஸ்  நிறுவனம் புதுமுகமான ஈஸ்வர் கொண்டு தயரிக்கவுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் அடுத்த படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் அவர்களை அணுகியதாக மகாநதி நடிகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஆனாலும் நடிகை இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை என அறியப்படுகிறது. கார்த்திக்கின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் வெப் சீரிஸ் கள்ளச்சிரிப்பு தயாரித்து வருகின்றது. 

இதற்கிடையில், கீர்த்தி சுரேஷ் தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்கிறார், அதன் பிறகு ஜூன் மாதம் ஐரோப்பாவில் நரேந்திரநாத் இயக்கத்திற்கு நடிப்பதற்காக பயணம் செய்கிறார். மேலும் ப்ரியாதர்ஷனின் படத்திலும் நடிக்கவிருப்பதாக தெரிகிறது. இயக்குனர் மணிரத்னம் அவர்களின் கனவு திட்டமனா  பொன்னியின் செல்வன் படத்திலும் அவரது பங்கு இருப்பதாக அறிவிக்கிறது. எனினும், ஒரு அதிகார அறிவிப்பிற்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு எடுக்கப்பட்ட படம் மகாநதி. தன்னுடைய தனிப்பட்ட நடிப்பினால் பலரது பாராட்டுகளை பெற்றார். மேலும் அமெரிக்கா வெள்ளி திரையில் வெளியிடப்பட்டு வசூலில் 2 மில்லியனையும் தாண்டி சாதனை படைத்தது. மேலும் இப்படத்தில் தூல்கர் சல்மான், விஜய் தேவரகொண்ட, சமந்தா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ்ஜின் அடுத்த படத்தில் இணையவிருக்கும் மகாநதி நடிகை