ads

காந்தாரா சாப்டர் 1 படத்தின் ஓடிடி தேதி வெளியீடு

காந்தாரா சாப்டர் 1 படத்தின் ஓடிடி தேதி வெளியீடு

காந்தாரா சாப்டர் 1 படத்தின் ஓடிடி தேதி வெளியீடு

நடிகர் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி நடித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம், வரும் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், இதுவரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 803 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தெரிவித்துள்ளது. இந்தப் படம் 2025 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியப் படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

புராணக் கதையும், ஆக்‌ஷனும் கலந்த இந்தப் படம், கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அமேசான் பிரைம் வீடியோவில் ஒரே நேரத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

காந்தாரா சாப்டர் 1 படத்தின் ஓடிடி தேதி வெளியீடு