ads
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த படம் காஞ்சனா 4
ராம் குமார் (Author) Published Date : Sep 12, 2025 17:27 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் இயக்குநரான ராகவா லாரன்ஸ், தனது அடுத்த படைப்பான காஞ்சனா 4 திரைப்படம் குறித்த அறிவிப்புடன் ஒரு நெகிழ்ச்சியான செய்தியையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
பேய் படங்களுக்கெனத் தனி அடையாளம் பதித்த ராகவா லாரன்ஸ், காஞ்சனா வரிசையில் அடுத்த பாகமாக காஞ்சனா 4 படத்தை இயக்கி நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டதாக அவர் நேற்று சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.
ராகவா லாரன்ஸ் படங்களுக்காக வாங்கும் அட்வான்ஸ் தொகையில் ஒரு பகுதியை எப்போதும் நல்ல காரியங்களுக்காகச் செலவு செய்வதை வழக்கமாகக் கொண்டவர். அந்த வரிசையில், காஞ்சனா 4 படத்திற்காகக் கிடைத்த அட்வான்ஸ் தொகையில், தான் முதன்முதலில் கட்டிய சொந்த வீட்டை இலவசக் கல்வி வழங்கும் பள்ளியாக மாற்றப் போவதாக அறிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸின் இந்த மனிதாபிமான செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாகவே ஏழை எளிய மக்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வரும் ராகவா லாரன்ஸ், தற்போது இலவசக் கல்வி வழங்கும் முயற்சியில் இறங்கியிருப்பது பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் ராகவா லாரன்ஸின் இந்தச் செயலைப் பாராட்டி வருகின்றனர்