Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

பாலிவுட்டை கலக்கவிருக்கும் காஞ்சனா பேய் சூப்பர்ஸ்டார் நடிகர் அறிவிப்பு

காஞ்சனா 2

தமிழில் மிரளவைத்த ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 தற்போது பாலிவுட்டிற்கு செல்வது உறுதியாகியுள்ளது. முனி படத்தில் தொடங்கிய ஆட்டம் தற்போது நான்கு படங்களை கடந்து நூறு சதவிகித வெற்றியை பதிவுசெய்துள்ளது காஞ்சனா படங்கள்.

தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் அக்ஷய் குமார் முனி மூன்றாவது  பாகமான காஞ்சனா 2-ஐ ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். அவர் நடிக்கும் இப்படத்தை தமிழில் இயக்கிய லாரன்சே இயக்குகிறார். மேலும் சோனம் கப்பூர் மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் படத்திற்கு லக்ஸ்மி பாம் என்று தலைப்பு வைத்துள்ளார்.

படம் ஜூன் 5,2019இல் வெளியாகும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர். படம் எப்படியும் ஹிட் அடித்துவிடும் என நம்பிக்கையில் உள்ள அக்ஷய் குமார் தமிழை போல காஞ்சனா தொடர் படங்களை உருவாக்குவார் என்று பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றது. சமீபத்தில் வெளியான காஞ்சனா திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் மிகப்பெரிய ஒப்பனிங் அடித்து பாக்ஸ் ஆபீஸ் வேற்றியை பதிவு செய்தது.

காஞ்சனா இரண்டாம் பாகம் 100 கோடி வசூல் சாதனை செய்து பெரிய சூப்பர்ஸ்டார் ஹீரோக்களுக்கு மட்டுமே உரித்தான 100 கோடி கிளப்பில் இணைந்த லாரன்ஸ் தொடர்ந்து காஞ்சனா படங்களை எடுக்க முடிவு எடுத்தார். மேலும் அப்பெயருக்கு ஒரு தனி மார்க்கெட் உண்டானது. இந்த மார்க்கெட் பாலிவுட்டில் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சமீபத்தில் பெரிய வெற்றி படம் ஏதும் அக்ஷய் கைவசம் வராத நிலையில் காஞ்சனா ரீமேக் அவரை வெற்றி பாதைக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாலிவுட்டை கலக்கவிருக்கும் காஞ்சனா பேய் சூப்பர்ஸ்டார் நடிகர் அறிவிப்பு