Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல், தோல்வியா? சினிமா விமர்சனம்

ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்

ஜுமான்ஜி படத்தின் மூன்றாம் பாகமான  "ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்" படத்தை பார்ப்பதற்கு முன், ஜுமான்ஜியின் மற்ற பாகங்களை சிறிது தெரிந்து கொள்ளுங்கள்.

1995 ஆம் ஆண்டு, குழந்தைகளை கவரும் வகையில் எடுக்கப்பட்ட ஜுமான்ஜி திரைப்படம், அனைத்து வயதுடையவர்களையும் கவரும் வகையில் அமைந்தது. 1995 ஆம் ஆண்டு ராபின் வில்லியம்ஸ் நடிப்பில் ஜோ ஜான்ஸ்டன் இயக்கத்தில் வெளியானது ஜுமான்ஜி படம், அந்த காலகட்டத்தில் உள்ள அதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய முயற்சியாக வெளிவந்து, மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது.

ஜுமான்ஜி (1995) படம், பகடை உருட்டி விளையாடும் சாதாரண பலகை விளையாட்டு. ராபின் வில்லியம்ஸ் தனது பெண் நண்பருடன் ஜுமான்ஜி விளையாடும் போது , விளையாட்டின் விதிமுறை படி, ராபின் வில்லியம்ஸ் ஜுமான்ஜி விளையாட்டினுள் சென்று விடுகிறார். 26 வருடத்திற்கு பிறகு வேறு இரு சிறுவர்கள் ஜுமான்ஜி விளையாடும் போது ராபின் வில்லியம்ஸ் நிஜ உலகிற்கு வருகிறார், பின்னர் நடப்பதே படத்தின் சுவாரிஸ்யம்.

சுமார் 22 வருடத்திற்கு பின் 2017 ஆம் ஆண்டு வந்த "ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கள்" படம், புதிய கதைக்களத்தில் வீடியோ கேம் முறையில், புதிய கதாபாத்திரங்கள் கொண்ட படமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாகத்திலும், ஒரு சிறுவன் தனியாக விளையாடும் பொது ஜுமான்ஜி விளையாட்டினுள் சென்று விடுகிறான்.

சில வருடங்கள் கழித்து, பள்ளி நண்பர்கள் நான்கு பேர் இந்த ஜுமான்ஜி வீடியோ கேம் விளையாடுகிறார்கள், இதில் இவர்களுக்கு தேவையான கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் வாய்ப்பும் இருக்கிறது பின் இவர்கள் நான்கு பேரும் ஜுமான்ஜி விளையாட்டினுள் செல்கிறார்கள். 

இது ஒரு விளையாட்டு என்பதால், இவர்களுக்கு மூன்று முறை உயிர் பிழைக்கும் வாய்ப்பு கிடைக்கும், மூன்று முறையிலும் தோற்று விட்டால், இவர்கள் நிஜ உலகிற்கு வரமுடியாது. இதில் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் பலம் மற்றும் பலவீனங்கள் இருக்கும். இதை மனதில் கொண்டு, இவர்கள் எதிரிகளை கையாள்வதற்கு மற்றும் பாதுகாப்பாக இருக்க உதவும். 

மிக சுவாரிஸ்யமாக இருக்கும் இந்த கதைக்களத்தில், ஜாகுவார் கண் திருடப்படுகிறது. இந்த கண்ணை கண்டுபிடித்து அதன் இருப்பிடத்தில் வைப்பது இந்த பாகத்தின் கதை கரு. இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் மிக பிரமாண்ட வடிவமைப்பில் உருவாக்கபட்டு, நகைச்சுவை பாணியில் மிக சுவாரிஸ்யமாக இருந்தது. 

இருபத்தி இரண்டு வருடத்திற்கு முன் ஜுமான்ஜி படத்தை பார்த்தவர்களுக்கு  இந்த பாகம் நிச்சியமாக சாகசம் நிறைந்த படமாக அமைந்து என்று கூறலாம். அந்த அளவிற்கு VFX தொழில்நுட்பம் தத்ருபமாக அமைந்திருந்தது. ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கள், உலகெங்கிலும் பல்வேறு மொழிகளில் வெளியாகி மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.

ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கள் படத்தை ஜேக் காஸ்டன் இயக்கியுள்ளார், இவர் இயக்கிய படங்களில் இது முக்கியமான படம். ஜுமான்ஜி கதாபாத்திரத்தில் டுவைன் ஜான்சன், கெவின் ஹார்ட், ஜாக் பிளாக், கரேன் கில்லன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இவர்களே இந்த வருடும் வெளியான ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் படத்திலும் அதே கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் சினிமா விமர்சனம்:

2017 ஆம் ஆண்டு வெளியான இதற்கு முந்தைய பாகத்தை போல இந்த பாகத்திலும், சிறந்த VFX தொழில்நுட்பத்தில் படத்தை எடுத்துள்ளார்கள். ஆனால் நல்ல விறுவிறுப்பான கதைக்களத்தை அமைக்க தவறிவிட்டார்கள் என்று கூறலாம். முந்தய பாகத்தில் நண்பர்கள் நால்வரும் ஜுமான்ஜியில் இருந்து நிஜ உலகத்திற்கு வந்த பின், ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வதில்லை. கதாநாயகன் நிஜ உலகில் தன்னை ஒரு பலவீனமாக கருதி, ஜுமான்ஜியில் இருந்ததை போல பலமாக இருக்க, திரும்ப ஜுமான்ஜிக்கு செல்லகிறான்.

தங்களது நண்பன் ஜுமான்ஜிக்குள் சென்றதை அறிந்த மற்ற நண்பர்களும் ஜுமான்ஜிக்குள் செல்கிறார்கள் , ஆனால் இந்த முறை ஜுமான்ஜியில் உள்ள கதாபாத்திரத்தை தேர்வு செய்யாமல் செல்வதால், போன பாகத்தில் இருப்பதை போல் இல்லாமல் மாறியிருக்கிறார்கள், மேலும் இந்த முறை கதாநாயகனின் தாத்தாவும் அவரது நண்பரும் இதில் சேருகிறார்கள்.

ஜுமான்ஜியில் வாழும் மக்கள் செழிப்புடன் வாழவைக்கும் ஃபால்கன் இதய கல் கொள்ளையடிக்கப்படுகிறது. நண்பர்கள் அனைவரும் திரும்ப நிஜ உலகிற்கு செல்ல, இந்த கல்லை கண்டுபிடித்து, சூரிய ஒளியில் காண்பித்தாள் திரும்ப மக்கள் செழிப்பாக வாழ உதவும் மற்றும் இந்த ஜுமான்ஜி விளையாட்டும் முடியும்.

இந்த கதை கருவை வைத்து படம் நகர்கிறது. போன பாகத்தில், சுவாரிஸ்யமான காட்சிகள் அமைந்திருந்தது ஆனால் இந்த பாகத்தில், பேசியே கொள்கிறார்கள். விறுவிறுப்பான காட்சிகள் இருந்தாலும், இதற்கு முந்தைய பகதைப்போல இல்லை.

இடைவேளையில் சிலர் திரையரங்கை விட்டு வெளியே சென்று விட்டார்கள் என்பது உண்மை. 2017 ஆம் ஆண்டு வெளியான "ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கள்" பாகத்தை பார்க்காமல் "ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்" பாகத்தை பார்த்தால், கண்டிப்பாக அனைவர்க்கும் பிடிக்கும். 2017 ஆம் ஆண்டு வெளியான பாகத்தை பார்த்தவர்களுக்கு இந்த பாகம் பிடிக்கவில்லை.

சுவாரிஸ்யம் இல்லாத கதை களமும், அதிகளவு பேசிக்கொண்டே இருப்பதால், குழந்தைகளையும் பெரிதாக கவரவில்லை, வசூல் சாதனையும் சாதாரணமாகவே உள்ளது.

ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல், தோல்வியா? சினிமா விமர்சனம்