Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2025.
All Rights Reserved

பராசக்தி vs ஜன நாயகன் வெற்றிபெறப்போவது யார் ?

பராசக்தி vs ஜன நாயகன் வெற்றிபெறப்போவது யார் ?

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் பொங்கலுக்கு இரண்டு பெரிய படங்கள் மோத இருக்கின்றன. தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் பராசக்தி ஆகிய இரண்டு படங்களின் வெளியீட்டு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

விஜய் நடிப்பில் உருவாகும் ஜன நாயகன் படம் ஜனவரி 9 ஆம் தேதியும், சிவகார்த்திகேயனின் பராசக்தி ஜனவரி 14 ஆம் தேதியும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜன நாயகன் திரைப்படம் தளபதி விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. மறுபுறம், நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் மற்றும் மதராஸி ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த மோதலில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பராசக்தி படத்தை வெளியிடுகிறது. மேலும், இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமைகளை கலைஞர் டிவி பெற்றுள்ளதால், இந்த பொங்கல் மோதல் விஜய்யா அல்லது சிவகார்த்திகேயனா என்பதை விட, டி.வி.கே.வா அல்லது தி.மு.க.வா என்ற அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த பொங்கல் போரில் துப்பாக்கியை கொடுத்த விஜய்யா அல்லது அதை வாங்கிய சிவகார்த்திகேயனா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த பரபரப்பான மோதலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பராசக்தி vs ஜன நாயகன் வெற்றிபெறப்போவது யார் ?