பொழுதுபோக்கு

ஜகமே தந்திரம் இன்று ரிலீஸ் ஆனால் ரிலீஸ் இல்லை - முட்டாள் வைரஸ்

பேட்ட வெற்றி படத்திற்கு பின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்த படம் ஜகமே தந்திரம். நடிகர் தனுஷ் இதில் கதாநாயகனாக, சஷிகாந்த் தயாரிப்பில், சந்தோஷ்...

By புருசோத்தமன் · ·1 min read

பேட்ட வெற்றி படத்திற்கு பின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்த படம் ஜகமே தந்திரம். நடிகர் தனுஷ் இதில் கதாநாயகனாக, சஷிகாந்த் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாகி உள்ளது.

இன்று இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியீட்டுள்ள செய்தியில், இன்று ஜகமே தந்திரம் படம் ரிலீஸ் ஆகி முதல் நாள் காட்சி முடிந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஆனால் இந்த முட்டாள் வைரஸ் அனைத்தையும் கெடுத்துவிட்டது.

ஜகம் சுகமடைந்ததும், கண்டிப்பாக ஜகமே தந்திரம்!! திரைக்கு வரும் என அறிவித்துள்ளார். தனுஷ் அதிக கேங்ஸ்டர் படங்களில் அசத்தியுள்ளார், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கேங்ஸ்டர் திரைக்கதையில் சிறப்பானவர், இவர்கள் இருவரின் கூட்டணி கண்டிப்பாக ரசிகர்களை அதிகம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பெரிய திரையை அதிகம் நேசிப்பவர், திரையரங்கின் அதிநவீன தொழில்நுட்பத்திற்கு தகுந்தபடி தனது படங்களில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்துவர். இதனால் பெரிய திரையில் ஜகமே தந்திரம் வராமல் அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆகுமோ என்ற குழம்ப வேண்டாம், கண்டிப்பாக கூடிய விரைவில் பெரிய திரையில் ஜகமே தந்திரம்.


Jagame Thandhiram Release Date and Latest Update
View full article on தமிழ் செய்திகள்