Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

இந்தியன் 2 படம்: இந்தியன் தாத்தா வருவதை யாராலும் தடுக்க முடியாது

இந்தியன் 2 படம். ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு

இந்தியன் 2 படம்: தமிழ் சினிமா வரலாற்றி மிக முக்கியமான SOCIALISM பேசும் திரைப்படமாக இருந்து வருவது இயக்குனர் ஷங்கரின் "இந்தியன்". இன்றும் இந்த படத்திற்கும் இந்த படத்தில் இந்தியன் தாத்தாவாக உலக நாயகன் நடித்த அந்த கதாப்பாத்திரத்திற்கும் ஏகப்பட்ட விசிறிகள் இருகின்றனர். தலைமுறை தாண்டி சாத்தித்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு "இந்தியன் 2 படம்" தமிழ் ரசிகர்களை ஆரவாராத்தில் மூழ்கடித்திருந்தது.

இருபத்தி இரண்டு வருடங்கள் கழித்து இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான இந்தியன் தாத்தாவாக மீண்டும் உலக நாயகன்  கமல் அவர்களே நடிப்பது தான் அந்த ஆரவாரத்திற்கு காரணம். மேக்கப்பில் அப்பொழுதே புதிய சாதனை படைத்தார் இயக்குனர் ஷங்கர். அதற்கு தன்னை அர்பணித்திருந்தார் கமல் ஹாசன்.

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் விறுவிறுப்பாக ஆரம்பமானது. ஆனால் ஒரே மாதத்தில் படபிடிப்பை நிறுத்திவிட்டனர் படக்குழுவினர். காரணம் படத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களுக்கு "ப்ரோதேடிக்ஸ்" சம்பந்தப்பட்ட மேக்கப் போடப்பட்டதாகவும், அந்த மேக்கப் உலக நாயகன் கமல் அவர்களது சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், டாக்டர்கள் சிலநாள் இந்த மேக்கப் போடாமல் இருக்கும் படி அறிவுரை செய்ததாகவும் கூறுகின்றனர்.

இதனால் தான் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று கூருகின்றனர் சிலர். இன்னும் சிலர் தயாரிப்பாளருக்கும் இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது என்றும் கூறிவந்தனர்.

ஆனால், தற்பொழுது இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்றும். ஜூன் மாதம் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது என்றும் தகவல்கள் வெளியாகிறது. படத்தை 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு முடித்து கொடுத்தால் போதும் என்று தயாரிப்பு நிறுவனம் ஷங்கரிடம் கேட்டு கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அடிக்கடி தள்ளிபோகும் காரணத்தால் தொடர்ச்சியாக இரண்டு வருட கால அவகாசத்தை ஷங்கருக்கு கொடுத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். ஜூன் மாதம் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் "பிக்பாஸ்" நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் படபிடிப்புகளில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.

ஆக கிடைக்கும் இடைவேளைகளில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோரும் படத்தில் பணியாற்ற உள்ளனர்.

இந்தியன் 2 படம்: இந்தியன் தாத்தா வருவதை யாராலும் தடுக்க முடியாது