பொழுதுபோக்கு

இளையராஜா: அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்

பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், தனது நிலையில் உறுதியாக உள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. எந்த ஒரு பதவிக்காக நான் மோடியை புகழவில்லை, எனக்கு எந்த பதவியும்...

By விக்னேஷ் · ·1 min read

பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், தனது நிலையில் உறுதியாக உள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. எந்த ஒரு பதவிக்காக நான் மோடியை புகழவில்லை, எனக்கு எந்த பதவியும் தேவையில்லை மேலும் என் கருத்தை திரும்ப பெற மாட்டேன் என இளையராஜா தெரிவித்துள்ளார்.

இளையராஜா கூறிய கருத்து, பிரதமர் மோடி தலைமையில், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. அனைத்திலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

சமூக நீதி விஷயத்தில், மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை கண்டு, அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் என, கூறியிருந்தார்.

இவர் கூறிய இந்த கருத்து பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அரசியல்வாதிகள் மற்றும் சினிமா துறையை சேர்ந்த சிலர் இசையமைப்பாளர் இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


View full article on தமிழ் செய்திகள்