ads

தனுஷின் இட்லி கடை படத்திற்கு நல்ல விமர்சனங்கள்

தனுஷின் இட்லி கடை படத்திற்கு நல்ல விமர்சனங்கள்

தனுஷின் இட்லி கடை படத்திற்கு நல்ல விமர்சனங்கள்

நடிகர் தனுஷ் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இட்லி கடை திரைப்படம் நேற்று, அதாவது அக்டோபர் 1 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியானது. தனுஷ் இயக்கி, நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உட்படப் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

படம் வெளியான முதல் நாளே, ரசிகர்களிடமிருந்தும் , விமர்சகர்களிடமிருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தின் கதை மிகவும் அருமையாக இருப்பதாகவும், குறிப்பாகத் தனுஷ் மற்றும் நித்யா மேனன் ஜோடி, திருச்சிற்றம்பலம் படத்தைப் போலவே இதிலும் நன்றாகப் பொருந்தி வந்துள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

படத்தின் முதல் பாதி மிகவும் அருமையாகவும், விறுவிறுப்பாகவும் இருந்ததாகப் பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இரண்டாம் பாதி இல்லை என்றும், அது சற்று மெதுவாகச் செல்வதாகவும் சில ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இட்லி கடை திரைப்படம் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக்கூடிய அருமையான படம் என்றும், மனதிற்கு இதமான ஒரு நல்ல படமாக உள்ளது என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம், தனுஷின் சினிமா வாழ்க்கையில் மற்றொரு வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷின் இட்லி கடை படத்திற்கு நல்ல விமர்சனங்கள்