அப்பாஸ், 11 வருஷத்துக்கு அப்புறம் நம்ம 'காதல் தேசம்' அப்பாஸ் தமிழ் சினிமாவுல ஒரு சூப்பரான ரீ-என்ட்ரி. ஜி.வி.பிரகாஷ் லீட் ரோல்ல நடிச்சு, மரியா ராஜா இளஞ்செழியன் டைரக்‌ஷன்ல வந்திருக்கிற இந்த 'ஹேப்பி ராஜ்', அப்பா-பையன் சென்டிமென்ட்டையும் சமூகத்தோட பார்வையையும் ரொம்ப கேஷுவலா, ஆனா ஸ்ட்ராங்கா சொல்லி இருகாங்க.

ஹேப்பி ராஜ் கதை:

நம்ம ஜி.வி.பிரகாஷோட நிஜ பேரு ஆனந்த்ராஜ், ஆனா அவருக்கு 'ஹேப்பி ராஜ்'னு ஒரு பேரு. அவரோட அப்பா கத்தாமுத்து (ஜார்ஜ் மரியன்) ஒரு ஸ்கூல் டீச்சர். ஆனா அவரோட தோற்றத்தை வெச்சு ஊர்க்காரங்க 'குதிரை முட்டை'னு கலாய்க்கிறாங்க. ஊரு பேசுறத தாங்க முடியாத ஹேப்பி ராஜ், கோவிச்சுக்கிட்டு வீட்டை விட்டு பெங்களூரு ஐடி கம்பெனிக்கு வேலைக்கு போயிடுறாரு.

அங்க கூட வேலை செய்ற காவ்யாவை (ஸ்ரீ கவுரி பிரியா) லவ் பண்றாரு. காவ்யாவோட பணக்கார அப்பா ராஜீவ் (அப்பாஸ்) கல்யாணத்துக்கு ஓகே சொன்னாலும், இந்த ரெண்டு முரண்பாடான குடும்பமும் மீட் பண்ணும்போது நடக்குற காமெடி, எமோஷனல் கலாட்டாக்கள் தான் படத்தோட மீதி கதை.

Actor Abbas in Happy Raj (2026) Tamil Movie
Actor Abbas in Happy Raj (2026) Tamil Movie

நடிப்பு எப்படி?

  • ஜார்ஜ் மரியன்: படத்தோட நிஜ ஹீரோ இவருதான்! 'கைதி, டிராகன் ' படத்துக்கு அப்புறம் மனுஷன் ஸ்கோர் பண்ணியிருக்காரு. இவரோட பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ்னு தாராளமா சொல்லலாம்.

  • ஜி.வி.பிரகாஷ்: வழக்கம் போல எனர்ஜியான ஆக்டிங். படத்துல தனக்கு எங்க ஸ்பேஸ் தேவையோ அங்க மட்டும் நின்னுட்டு, ஜார்ஜ் மரியனுக்கு முழுசா வழிவிட்ட விதத்துல ஜி.வி ரொம்பவே மெச்சூர்டா தெரியுறாரு.

  • அப்பாஸ்: 11 வருஷம் ஆனாலும் அந்த ஈர்ப்பு கொஞ்சம் கூட குறையல. பணக்கார அப்பாவா, ராஜீவ் கேரக்டர்ல செமயா நடித்திருக்கிறார். ஆக்டிங், டான்ஸ்னு மனுஷன் பிரிச்சு மேய்ஞ்சிட்டாரு.

  • ஸ்ரீ கவுரி பிரியா: பாக்குறதுக்கு க்யூட்டா இருக்குறது மட்டும் இல்லாம, தனக்கு கொடுத்த ரோல்ல சூப்பரா நடிச்சிருக்காங்க.

  • கீதா கைலாசம்: சப்போர்ட்டிங் ரோல்ல ரொம்பவே நீட்டான பெர்ஃபார்மன்ஸ் குடுத்துருக்காங்க.

ஜஸ்டின் பிரபாகரன் மியூசிக், மதன் கிறிஸ்டோபர் கேமரா ரெண்டும் படத்துக்கு பெரிய பலம். ஃபர்ஸ்ட் ஹாஃப்ல கொஞ்சம் சின்னச் சின்ன லேக் இருந்தாலும், செகண்ட் ஹாஃப்ல வர்ற அழுத்தமான எமோஷனல் சீன்ஸ் அதையெல்லாம் ஈஸியா மறக்கடிச்சிடுது.

ஹேப்பி ராஜ் படம் எப்படி இருக்கு?

"சமூகத்துல யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை" அப்படிங்கிற அருமையான மெசேஜை டைரக்டர் மரியா ராஜா இளஞ்செழியன் ரொம்ப ஆழமா, ஆனா போரடிக்காம சொல்லியிருக்காரு. மொத்தத்துல வீக்கெண்ட்ல ஃபேமிலியோட போய் தாராளமா பார்த்து என்ஜாய் பண்ணக்கூடிய படம்.

Happy Raj (2026) Tamil Movie Stills
Happy Raj (2026) Tamil Movie Stills