பொழுதுபோக்கு

முதல் நாள் ஷிவானிக்கு பிக் பாஸ் வீட்டில் நேர்ந்த சோகம்

இன்று முதல் பிக் பாஸ் வீட்டின் செயல்பாடுகள் நமக்கு ப்ரோமோ வீடியோ மூலம் தெரியப்படுத்துவார்கள். இன்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி ப்ரோமோவில் அனைவரும் சின்ன பெண்...

By புருசோத்தமன் · ·1 min read

இன்று முதல் பிக் பாஸ் வீட்டின் செயல்பாடுகள் நமக்கு ப்ரோமோ வீடியோ மூலம் தெரியப்படுத்துவார்கள். இன்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி ப்ரோமோவில் அனைவரும் சின்ன பெண் ஷிவானியை ஓரங்கட்ட தொடங்கிவிட்டார்கள்.

சண்டை, குழப்பம், கூச்சல், காதல் உங்களுக்கு பெயர் போன பிக் பாஸ், முதல் நாளில் பரபரப்பை தொடங்கிவிட்டது. இரண்டாவது ப்ரோமோ வீடியோ விஜய் டிவி வெளியிட்டிருக்கிறது, அதில் சீரியல் நடிகை ஷிவானி நாராயணனனை சனம் ஷெட்டி மற்றும் சிலர் டார்கெட் செய்கிறார்கள்.

பற்றாக்குறைக்கு உசுப்பேத்தும் வகையில் சுரேஷ் சக்ரவர்த்தி ஷிவானி நாராயணனை பார்த்து ஏன் எப்போதும் முகத்தை அப்படி வைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்க, ஷிவானியின் முகம் பயம் கலந்த சோகத்தை காண்பிக்கிறது.

இவர் சிறுவயது பெண் என்பதால், இவருக்கு இன்னும் அந்த அளவிற்கு பொறுப்பு இல்லை என கிண்டல் செய்கிறார்கள். இதற்கு பதில் கொடுத்த ஷிவானி, தனக்கு மற்றவர்களிடம் பழகுவதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்று சொல்கிறார்.

இதை பார்க்கும் போது, சீக்கரம் ஷிவானிக்கு ஒரு ஆர்மி ரசிகர்கள் தொடங்குவார்கள் என தெரிகிறது. ஊரடங்கு காலத்தில் அதிக போட்டோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் ஷோவாணி எலிமினேஷனில் கண்டிப்பாக தப்புவார்.


Bigg Boss Tamil Season 4 Latest News
View full article on தமிழ் செய்திகள்