ads
பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
அசோக் (Author) Published Date : Oct 09, 2025 15:40 ISTபொழுதுபோக்கு
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூட் திரைப்படம், வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது. இந்நிலையில், இன்று இப்படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லரைப் பார்க்கும்போதே டியூட் திரைப்படம் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், இதற்கு முன் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றதேயாகும்.
மேலும், இப்படத்துக்கு இசையமைத்துள்ள சாய் அப்யங்கர் அவர்களின் இசை மிகவும் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர். பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகை மமிதா பைஜுவின் ஜோடியும் நன்றாகப் பொருந்தி இருப்பதாகப் பாராட்டுகள் குவிகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாவதால், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், இந்தத் தீபாவளி ரேஸில் டியூட் படத்துடன் துருவ் விக்ரமின் பைசன் மற்றும் ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய படங்களும் மோதுகின்றன. இந்த பலமான மோதலைத் தாண்டி, பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் ஹாட்ரிக் வெற்றியைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.