பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயன் டாக்டர் தமிழ் படம் அக்டோபர் 9ஆம் தேதி ரிலீஸ்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் தமிழ் திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரபூர்வமாக தனது டிவிட்டர்...

By விக்னேஷ் · ·1 min read

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் தமிழ் திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரபூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார், சிவகார்த்திகேயன்.

நடிகர் விஜயின் படத்தை இயக்கி வரும் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள தமிழ் திரைப்படம் டாக்டர். பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு, வினய், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள அணைத்து பாடல்களும் கடந்த ஒரு வருடமாக பிரபலம், குறிப்பாக செல்லம்மா செல்லம்மா மற்றும் சோ பேபி பாடல்கள் பலரின் மொபைலில் இன்றும் ரிங்டோன் ஒலித்துக்கொண்டிருந்தது.

கொரோனா நோய் தொற்றால் தியேட்டர்கள் திறக்கப்படாதலால், கடந்த வருடம் 2020 ரிலீஸ் ஆக வேண்டிய டாக்டர் தமிழ் படம் ஒரு வழியாக இந்த வருடம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆவது, ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.


டாக்டர் (2021) தமிழ் படம்
View full article on தமிழ் செய்திகள்