ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ஸ்பை ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான துரந்தர், இந்தியத் திரையுலகில் புதிய வசூல் மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த டிசம்பர் 5, 2025 அன்று வெளியான இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று தற்போது ஓடிடி-யில் வெளியாகத் தயாராகிவிட்டது.

பாக்ஸ் ஆபிஸ் சாதனை

வெளியான 32 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் துரந்தர், இதுவரை ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது. இப்படத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாகவும், அக்‌ஷய் கண்ணா மிரட்டலான வில்லனாகவும் நடித்துள்ளனர்.

ஓடிடி ரிலீஸ் எப்போது?

இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. திரையரங்குகளில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற போதிலும், இதன் டிஜிட்டல் உரிமை சுமார் ரூ. 130 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வரும் ஜனவரி 30, 2026 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் துரந்தர் வெளியாகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான உரிமையையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதன் இரண்டாம் பாகம் வரும் மார்ச் 19, 2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது