பொழுதுபோக்கு

தாராள பிரபு, வால்டர், அசுரகுரு இதில் எந்த படம் நல்ல இருக்கு

நேற்று ரிலீஸ் ஆன மூன்று முக்கிய தமிழ் படங்கள் தாராள பிரபு, வால்டர், அசுரகுரு. விஜய் டிவி பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வந்த படம் தாராள பிரபு. சிபி...

By புருசோத்தமன் · ·1 min read

நேற்று ரிலீஸ் ஆன மூன்று முக்கிய தமிழ் படங்கள் தாராள பிரபு, வால்டர், அசுரகுரு. விஜய் டிவி பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வந்த படம் தாராள பிரபு. சிபி சத்யராஜ் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வால்டர். விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் அசுரகுரு.

ஹரிஷ் கல்யாண் தாராள பிரபு படம் விமர்சனம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் கிடைத்த நடிகர் ஹரிஷ் கல்யாண். இவரும் நடிகர் விவேக்கும் சேர்ந்து நகைச்சுவையில் கலக்கிய படம் தான் தாராள பிரபு. ஹரிஷ் கல்யாண் தனது விந்தணுக்களை மிக தாராளமாக கேட்பவர்களுக்கு எல்லாம் தானம் செய்கிறார், இதனால் மற்றவர்களுக்கு குழந்தைகள் கிடைத்து குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் என்ற எண்ணத்தில். ஒருபுறம் நகைச்சுவையாக இருந்தாலும், இந்த தானத்தினால் ஏற்படும் பின்விளைவுகளை நகைச்சுவையுடன் இயக்கியுள்ளார் இயக்குனர். படத்தை ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.

சிபி சத்யராஜ் வால்டர் படம் விமர்சனம்

வால்டர் வெற்றிவேல் படத்தில் நடிகர் சத்யராஜை பார்ப்பதை போல் இருந்தது நேற்று வெளியான வால்டர் படத்தில் சிபி சத்யராஜை பார்ப்பதற்கு. குழந்தை கடத்தல் தான் படத்தின் மைய கரு. குழந்தைகளை பணத்திற்காக கடத்துவார்கள், குழந்தைகளை கடத்தி விற்பார்கள் இதுபோன்ற பல கதைகள் பார்த்துள்ளோம். ஆனால் வால்டர் படத்தில் உண்மையில் நடந்த ஒரு கதையின் கருவை மாற்றாமல், சிறந்த கதாபாத்திரங்களின் தேர்வுடன் மக்களுக்கு புரியும் படி ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது வால்டர் படம். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

விக்ரம் பிரபு அசுரகுரு படம் விமர்சனம்

கதை தேர்வுகளில் கவனம் காட்டிய விக்ரம் பிரபு இந்த படத்தில் தவறவிட்டாரா அல்லது நல்ல கதையை சிறப்பாக திரைக்கதை எழுதாமலும், வடிவமைக்கவில்லையா என்று தெரியவில்லை. நெகட்டிவிட்டி ஹீரோ கதை, சிறுவயதில் ஏற்படும் ஒரு நிகழ்விற்காக அடிக்கும் கொள்ளை, பல இடங்களில் சலுப்பு தட்டுகிறது, பழைய கதையை புதிய முயற்சி இல்லாமல் பார்த்தாற்போல் உள்ளது. இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம்.

நேற்று ரிலீஸ் ஆன இந்த மூன்று படங்களும் பார்க்கும் அளவிற்கு இருந்தாலும், சில நகரங்களில் திரையரங்குகள் நிரம்பவில்லை. இதற்கு முக்கிய காரணம் கொரோன வைரஸ் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பரவுவதாக வந்த செய்திகள். மேலும் இப்படங்கள் தமிழ் ராக்கர்ஸ் இணையத்திலும் கசிந்தது தயாரிப்பாளர்களுக்கு சிறிதளவு நஷ்டத்தை ஏற்படுத்தும்.


ஹரிஷ் கல்யாண் தாராள பிரபு படம் விமர்சனம்விக்ரம் பிரபு அசுரகுரு படம் விமர்சனம்வால்டர் பட திரை விமர்சனம்சிபி சத்யராஜ் வால்டர் படம் விமர்சனம்Dharala Prabhu Tamil Movie ReviewAsuraguru Tamil Movie ReviewTamil New Movies 2020
View full article on தமிழ் செய்திகள்