Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2025.
All Rights Reserved

கூலி படத்தின் முன்பதிவு: ரஜினிகாந்தின் கம்பேக்

கூலி படத்தின் முன்பதிவு: ரஜினிகாந்தின் கம்பேக்

பல வருடங்களுக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இந்த அளவிற்கு வேகம் எடுத்திருப்பது 'கூலி' படத்திற்குத்தான் என்று சொல்லலாம்.

இதற்கு முன்பு, 'கபாலி' படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், படம் வெளியான பிறகு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மாஸ் ஆக்‌ஷன் படமாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, அது ஒரு சென்டிமென்ட் படமாக இருந்ததே ஏமாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

'கபாலி'க்குப் பிறகு, ரஜினியின் அடுத்தடுத்த படங்களுக்கு முன்பதிவில் ரசிகர்கள் பெரிய ஆர்வம் காட்டவில்லை. 'பேட்ட' மற்றும் 'ஜெயிலர்' போன்ற படங்கள் வெளியான பின், நல்ல விமர்சனங்கள் வந்த பிறகே ரசிகர்கள் முன்பதிவு செய்யத் தொடங்கினர்.

இத்தகைய நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'கூலி' படம் வெளியாவதற்கு முன்பே முன்பதிவு சூடுபிடித்திருப்பதற்கு முக்கிய காரணம், ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் இந்த கூட்டணிதான்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'கூலி' திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கூலி படத்தின் முன்பதிவு: ரஜினிகாந்தின் கம்பேக்