ads

பைசன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள்

பைசன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள்

பைசன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடித்திருக்கும் பைசன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படத்தைப் பார்த்த பலரும், சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

பைசன் திரைப்படம், கபடி விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்டிருப்பதோடு, ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், தன் திறமையால் அனைத்துத் தடைகளையும் உடைத்து எப்படி வெற்றி பெறுகிறான் என்பதை அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கதாநாயகனாக நடித்திருக்கும் துருவ் விக்ரமின் நடிப்பு சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டுகிறார்கள்.இயக்குநர் மாரி செல்வராஜ், தனக்கே உரிய பாணியில் சமூக அரசியலையும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தையும் கபடி களத்துடன் இணைத்து உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ளதாக ரசிகர்கள் புகழாரம் சூட்டுகின்றனர். கதையின் மையக்கருவைச் சிதைக்காமல், அழுத்தமான திரைக்கதையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ள மாரி செல்வராஜின் இயக்கம் பாராட்டத்தக்கது என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பைசன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள்