பொழுதுபோக்கு

பிக் பாஸ் தமிழ் லட்சுமி மேனன், மற்றவர்களின் தட்டுகளை கழுவ விரும்பவில்லை

கும்கி படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி அதிகம் ரசிகர்களை கொண்டவர் லட்சுமி மேனன். இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் றெக்க....

By விக்னேஷ் · ·1 min read

கும்கி படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி அதிகம் ரசிகர்களை கொண்டவர் லட்சுமி மேனன். இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் றெக்க. விஜய்சேதுபதியுடன் ஜோடியாக நடித்துள்ளார், இந்த படம் பெரிய அளவில் வெற்றிப்படமாக அமையவில்லை.

றெக்க படத்திற்கு பிறகு எந்த படமும் அமையவில்லை, பிறகு இவரை பற்றி எந்த ஒரு செய்திகளும் வரவில்லை. ஆனால் சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வரப்போகிறார் என்று வதந்திகள் வர தொடங்கின.

சமீபத்தில், பிக் பாஸ் நான்காவது சீசனில் பங்கேற்றவர்களில் ஒருவராக அவர் இறுதி செய்யப்பட்டுள்ளார் என்று வதந்தி பரவியது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இதை பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களின் தட்டுகளை கழுவுவதில் ஆர்வம் எனக்கு இல்லை மேலும் பிக் பாஸில் கலந்துகொள்ளும் விருப்பமும் இல்லை.

ஒரு நிகழ்ச்சியின் பெயரில் கேமராவில் தன்னுடன் இருப்பவர்களுடன் சண்டையிட விரும்பவில்லை , தனக்கு இப்போதைக்கு மற்றவர்கள் உபயோகப்படுத்திய கழிவறையை சுத்தும் செய்யவும் விருப்பமில்லை என்று வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லட்சுமி மேனன்.


View full article on தமிழ் செய்திகள்