பொழுதுபோக்கு

பிக் பாஸ் தமிழ் 4: கடாரம் கொண்டான் நடிகர் அபி ஹாசன்

பிக் பாஸ் தமிழின் நான்காவது சீசனில் நடிகர் அபி ஹாசன் பங்கேற்பது குறித்த வதந்திகளைத் தடுத்து நிறுத்துவதற்காக, கடாரம் கொண்டான் என்ற படத்தின் மூலம் பிரபலமான...

By புருசோத்தமன் · ·1 min read

பிக் பாஸ் தமிழின் நான்காவது சீசனில் நடிகர் அபி ஹாசன் பங்கேற்பது குறித்த வதந்திகளைத் தடுத்து நிறுத்துவதற்காக, கடாரம் கொண்டான் என்ற படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அபி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

முன்னதாக, பிக் பாஸ் தமிழ் 4 போட்டிகளில் அபி ஹாசன் ஒருவராக இருப்பார் என்று வதந்திகள் வந்தன, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸின் நான்காவது சீசன் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி ஒளிபரப்பப்படும் என்று கூறப்படுகிறது.

பிக் பாஸ் தமிழில் நடிகர் அபி ஹாசன் போட்டியாளராக வரப்போகிறார் காரணம் , இவர் கமல் ஹாசன்னுக்கு வேண்டப்பட்டவர் என்பதை நெட்டிசன்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வதந்திகளை தெளிவுபடுத்தும் விதமாக பங்கேற்பது குறித்த ஒரு புகைப்படத்தை வெளியீட்டுள்ளார், அதில், " இல்லை நான் பிக் பாஸ் தமிழில் போட்டியாளர் கிடையாது" என்று தெளிவாக கூறியுள்ளார்.

ரம்யா பாண்டியன், புகழ், சிவானி நாராயணன் மற்றும் மணிமேகலை ஆகியோர் பங்கேற்பாளர்களாக உறுதி செய்யப்பட்ட பிரபலங்கள் என செய்திகள் ஏற்கனவே வந்துள்ளது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதி வார்த்தை சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வரவில்லை.


பிக் பாஸ் தமிழ் 4 - புதிய செய்திBigg Boss Tamil Season 4 Latest News
View full article on தமிழ் செய்திகள்