Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

வெளியானது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் புதிய டீசர், குதூகலத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ் 3 டீசர்

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை படத்த ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். வெற்றிகரமாக இரண்டு சீசன்களை தாண்டி மூன்றாவது சீசனை குதூகலமாக ஆரம்பித்துள்ளது ஸ்டார் விஜய் டிவி. எந்த வித வெளியுலக தொடர்புகளும் இல்லாமல் நூறு நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பது தான் நிகழ்ச்சியின் போட்டி. போட்டியாளர்கள் தங்கியிருக்கும் வீட்டுகுள்ளேயே அவர்களுக்காக பிரத்தியேகமான போட்டிகளும் நடத்தப்படும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த இரண்டு வருடமாக நமது உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த முறையும் வரே தான் தொகுத்து வழங்க போகிறார். இந்த அறிவிப்பை ஸ்மார்ட்டான புதிய டீசர் மூலமாக அறிவித்துள்ளது விஜய் டிவி. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ டீசரில் நமது உலகநாயகன் அவர்கள் எப்போதும் போல கம்பீரமான தோற்றத்தில் முறுக்கு மீசையுடன் களமிறங்கி இருப்பது தெரிகிறது. சமீபத்தில் தான் பிக்பாஸ் மூன்றாவது சீசனுக்கான சில பிரத்தியேக வேலைப்பாடுகள் நடந்து வருவதாகவும், அங்கே உலக நாயகனை வைத்து படபிடிப்புகள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன.

பலர் இதை நம்பினாலும் அனேக ரசிகர்கள் இது வதந்தி என்றே கூறிவந்தனர். காரணம் உலக நாயகன் அவர்கள் ஆரம்பித்த “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் பணிகளில் பிஸியாக இருக்கிறார் என்றும். அவருக்கு இதற்கெல்லாம் எங்கே நேரமிருக்கிறது என்று கூறிவந்தனர். மேலும் சமீபத்தில் அவர் பிரச்சாரத்தில் பேசிய சில வார்த்தைகள் அவருக்கே பாதகமாக அமைந்தது. அவர் மீது வழக்குகளும் போடப்பட்டுள்ளது. மேலும் அவரது இல்லம், அலுவலகம், விடுதி போன்ற முக்கியமான இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர் காவல்த்துறையினர். ஆனால் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் ப்ரோமோ டீசர் அனைத்து விதமான வந்தந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் என சாந்தினி தமிழரசன், ரமேஷ் திலக், டி.ராஜேந்தர், ராதா ரவி, கஸ்தூரி உள்ளிட்ட பலரின் பேர்களும் வெளியாகின ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று நம்மால் நம்ப முடியாது, விஜய் டிவியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பின் வாயிலாகவே நிஜ போட்டியாளர்கள் யார் யார் என்று நமக்கு தெரியவரும். அதுவரை காத்திருப்போம்.

வெளியானது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் புதிய டீசர், குதூகலத்தில் ரசிகர்கள்