Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

இந்த வார சினிமா - விஷாலின் அயோக்யா படம் நாளை ரிலீஸ், படத்தின் வேற லெவல் வீடியோ பாடல் இன்று வெளியீடு

வேற லெவல் வீடியோ பாடல்

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கட் மோகனின் புதுமுக இயக்கத்தில் பி. மது அவர்களின் தயாரிப்பில் இசையமைப்பாளர் தமனின் இசையில் நடிகர் விஷாலின் நடிப்பில் வெளிவரும் அயோக்யா படம் நாளை (மே 10) உலகெங்கும் திரைக்கு வர உள்ளது. படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், விஷால் சப் இன்ஸ்பெக்டராகவும் அவருடன் இயக்குனரான கே.எஸ், ரவிக்குமார் கான்ஸ்டேபிளாகவும் நடிக்கின்றனர். படத்தின் ட்ரைலரைப் பார்க்கும்போது நடிகர் பார்த்திபன் வில்லனாக களமிறங்குகிறார் என்பது தெறிகிறது.

மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு மார்க்கெட்டை தன் வசம் வைத்திருக்கும் ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில், தேவதர்ஷினி, சோனியா அகர்வால், பூஜா தேவரியா ஆகியோர் நடிக்கின்றனர். ஐடம் பாடல் ஒன்றுக்கு சானா கான் நடனமாடுகிறார். இந்தப் படத்தின் ட்ரைலர் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம், ட்ரைலரில் இடம் பெற்ற அனல் பறக்கும் வசனங்களே. ட்ரைலர் முழுவதும் விஷாலை நெகடிவ் கதாபாத்திரமாகவே காண்பித்தாலும் ட்ரைலரின் இறுதியில், பெண்களுக்கு ஆதரவாக நீதி மன்றத்தில் வாதாடும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் நீங்காமல் இடம் பிடித்துள்ளன.

சமூகத்தில் அதிகமாகி உள்ள பெண்களுக்கான எதிரான குற்றங்களை வெளிப்படுத்தும் விதமாகவும் பெண்களை நாசம் செய்பவர்கள் மீது தனக்கு இருக்கும் கோபத்தை வெளிக்காட்டும் விதமாகவும் வசனங்கள் அமைந்ததற்கு இயக்குனர் மோகன் அவர்களுக்கு விஷால், தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பதிவில் நன்றி தெரிவித்துக் கொண்டார். ஏற்கனவே, அயோக்யா படத்தின் கண்ணே கண்ணே வீடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் தூண்டி இருக்கிறது. விஷாலுடன் சானா கான் குத்தாட்டம் போடுவது போல் இருக்கும் வேற லெவல் பாடலுக்கான போஸ்டரில் பாடல் நேற்று மாலை வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பாடல் வெளியாகி விடியோவை ட்ரெண்டிங் ஆக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்த்த விஷால் ரசிகர்களுக்கு பெரும் தான். இந்நிலையில், படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கும் சூழலில், வீடியோ பாடல்

இன்றாவது வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வார சினிமா - விஷாலின் அயோக்யா படம் நாளை ரிலீஸ், படத்தின் வேற லெவல் வீடியோ பாடல் இன்று வெளியீடு