Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

அயோக்யா: தியேட்டரில் குவிந்த ரசிகர்களை ஏமாற்றிய விஷால்

அயோக்யா

தமிழ் சினிமா ரசிகர்களை நடிகர் விஷால் ஏமாற்றிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. காரணம் நடிகர் விஷால் இன்று காலை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு தகவல் தான். அதில் “அயோக்யா படத்தின் ரிலீஸுக்காக நான் என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டேன், ஆனால் அதில் என்னால் வெற்றியடைய முடியவில்லை. எனக்கென்று ஒரு நாள் வரும், அதுவரை என் பயணத்தை தொடர்ந்திடுவேன்” என்று டுவிட் செய்துள்ளார்.

படத்தின் பி.ஆர்.ஓவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் அயோக்யா ரிலீஸ் இன்று இல்லை என்று பதிவிட்டுருந்தார். அதே போல அயோக்யா படம் இன்று வெளியாகவில்லை. படம் ரிலீஸ் ஆகவேண்டிய அனைத்து திரையரங்கங்களிலும் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் திரையரங்கங்களில் ஒரு வாரத்திற்கு முன்பே படத்தின் டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்து படம் பார்க்க ஆவலாக காத்திருந்த எல்லா ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இன்று காலை அயோக்யா திரைப்படத்தின் முதல் காட்சி என்பதால் ரசிகர்கள் திரையரங்கங்களின் முன் பேனர், கட் அவுட் ஆகியவைகளை தயார் செய்து முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். திடீரென திரையரங்க உரிமையாளர்கள் இந்த படத்தின் ரிலீஸ் இன்று இல்லை என்று அறிவித்ததும் விஷால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

விஷால் ரசிகர் மன்றம் சார்பாகவும், திரையரங்கங்களிலும் டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு வசூலிக்ப்பட்ட தொகை திருப்பி தரப்பட்டது. படத்தை பார்க்க முன்கூட்டியே டிக்கேட்டை ஆன்லைனில் ரிசர்வ் செய்த ரசிகர்களுக்கு அவர்களது பணம், அவரவர் வங்கி கணக்கில் திருப்பி அனுப்பப்படும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் படம் வெளியாக இருந்த நிலையில், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பலர் கூறுகின்றனர்.

நடிகர் விஷால் நடித்துள்ள இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்னைகளை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. படம் இன்று ரிலீஸ் ஆகாது என்ற அறிவித்தவர்கள் படம் இனி எப்போது வெளியாகும் என்றும் அறிவிக்கவில்லை. ஒருவேளை தயாரிப்பாளர் சங்க பிரச்சனையாக இருக்குமோ என்றம் தோன்றுகிறது.

அயோக்யா: தியேட்டரில் குவிந்த ரசிகர்களை ஏமாற்றிய விஷால்