ads
தியேட்டரில் வெளியாகும் அரசன் ப்ரோமோ
அசோக் (Author) Published Date : Oct 14, 2025 18:07 ISTபொழுதுபோக்கு
நடிகர் சிம்பு நடிப்பில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அரசன் திரைப்படத்தின் புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ். தாணு அவர்கள், அரசன் படத்தின் ப்ரோமோவை வெளியிடும் தேதியை ஒரு போஸ்டர் மூலம் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
அக்டோபர் 16 ஆம் தேதி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் அரசன் படத்தின் ப்ரோமோ திரையிடப்பட உள்ளது. அக்டோபர் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு யூடியூப் தளத்திலும் புரொமோ வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை, ப்ரோமோ திரையிடலுக்கான டிக்கெட் முன்பதிவு சென்னையில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிக்கப்பட்ட திரையரங்குப் பட்டியலில் பல மாவட்டங்களின் பெயர்கள் இல்லாததால், எங்கள் மாவட்டத்தில் எப்போது வெளியாகும்?, என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதிகளில் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.