ads
ஆரியன் படம் ராட்சசனை மிஞ்சுமா ?
அசோக் (Author) Published Date : Oct 23, 2025 14:18 ISTபொழுதுபோக்கு
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆரியன் திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ராட்சசன் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்ததால், அதே பாணியில் உருவாகியுள்ள ஆரியன் படத்துக்கும் அந்த ஒப்பீடு வரலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதுகுறித்து பேசிய விஷ்ணு விஷால், இந்தப் படத்துக்கு ராட்சசன் படத்துடன் கண்டிப்பாக ஒப்பீடு வரும் என்று எனக்குத் தெரியும். ஆனால், இது ராட்சசன் படம் கிடையாது. அந்த அளவுக்கு இந்தப் படம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், இது நிச்சயம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டதாக இருக்கும், என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பாத்திரம்தான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். செல்வராகவன் ஏற்கெனவே சில படங்களில் தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், ஆரியன் படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த விஷ்ணு விஷாலின் பேச்சு, ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.