3BHK திரைப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி OTT-யில் வெளியாகிறது
ராம் குமார் (Author) Published Date : Jul 31, 2025 15:18 ISTபொழுதுபோக்கு
இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் கடந்த ஜூலை 4-ம் தேதி 3BHK திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது .
தற்போது இத்திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 3BHK திரைப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளிநாடுகளில் சிம்பிளி சவுத் (Simply South) ஓடிடி தளத்தில் வெளியாகும். அதேநாளில், இந்தியாவில் அமேசான் பிரைம் (Amazon Prime) ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது பெரும் எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வீடு வாங்கும் கனவை இத்திரைப்படத்தில் அழகாக காட்டி , மக்களின் மனதில் இடம்பிடித்தார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்.
மேலும் இத்திரைப்படத்தில் சரத் குமார், சித்தார்த், தேவயாணி, மீதா ரகுநாத் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.